பிரித்தானிய மன்னராக சார்லஸ் அணியவிருக்கும் தங்க ஆடைகள்!
பிரித்ததானிய மன்னராக சார்லஸ் முடி சூடும் விழாவிற்கான ஏற்பாடுகள் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது.
பிரித்ததானிய மன்னர் சார்லஸ், முடிசூட்டு விழாவின் போது அணியவிருக்கும் நூற்றாண்டு பாரம்பரியமிக்க தங்கத்திலான ஆடைகள் தயார்படுத்தப்பட்டுள்ளது.
லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் இன்று (6.06.2023) முடிசூட்டு விழா நடைபெற உள்ளது.
வரலாற்று சிறப்பு மிக்க ஆடைகள்
அதில் மன்னர் சார்லஸ் இரண்டு வரலாற்று சிறப்பு மிக்க ஆடைகளை அணியவிருக்கிறார்.
இதில் ஒரு ஆடை 1821ம் ஆண்டு அப்போதைய மன்னர் 4ம் ஜார்ஜுக்காகவும், மற்றொன்று 1911ம் ஆண்டு மன்னர் 5ம் ஜார்ஜுக்காகவும் வடிவமைக்கப்பட்டது.
இந்த ஆடைகளை ராணி எலிசபெத் அவரது முடிசூட்டு விழாவின் போது அணிந்திருந்த நிலையில், 70 ஆண்டுகளுக்கு பிறகு அந்த ஆடைகள் மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழாவில் பயன்படுத்தப்படவுள்ளது.
அத்துடன் இந்த விழாவிற்காக இங்கிலாந்து மன்னர்கள் பாரம்பரியமாக பயன்படுத்தி வந்த 700 ஆண்டுகள் பழமையான தங்க முலாம் பூசப்பட்ட சிம்மாசனமும் தயார்ப்படுத்தப்பட்டுள்ளது.
பாரம்பரியமிக்க சாரட் வண்டி
இந்த விழாவைக் காண ஒட்டுமொத்த இங்கிலாந்தும் தயாராகி வரும் நிலையில், சார்லஸை அழைத்துச் செல்வதற்காக பாரம்பரியமிக்க சாரட் வண்டி மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.
முடி சூடும் நிகழ்வு நிறைவடைந்ததும் சாரட் வண்டியில் சார்லசும், அவரது மனைவி கமிலாவும் பக்கிங்காம் அரண்மனை தேவாலயத்திற்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுவர்.
இந்நிலையில் புனித எட்வர்டின் கிரீடம் மன்னர் சார்லஸின் தலையில் அணிவிக்கப்பட்ட உடன், அவரது மனைவி கமிலா இங்கிலாந்து ராணியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்.
இந்த விழாவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.