வெள்ளைப்பூண்டு மோசடி: 6ஆவது சந்தேகநபர் கைது
சதொச நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இன்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
பம்பலப்பிட்டியைச் சேர்ந்த 56 வயதான வர்த்தகர் ஒருவரின் புதல்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சதொச நிறுவனத்துக்குப் பெற்றுக்கொடுக்கப்பட்ட சுமார் 150 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதி கொண்ட சுமார் 56 ஆயிரம் கிலோகிராம் வரையிலான இரு வெள்ளைப்பூண்டு கொள்கலன்களை உயர் அதிகாரிகளின் எந்த அனுமதியும் இன்றி மூன்றாவது தரப்பொன்றுக்கு விற்பனை செய்த விவகாரத்தில் ஏற்கனவே ஐவர் கைது செய்யப்பட்ட நிலையில் ஆறாவது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நபரை விசாரணைகளின் பின்னர் இன்று நீதிமன்றத்தில் முன் நிறுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஏற்கனவே கைது செய்யப்பட்ட ஐவரும் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான ரொக்கப்
பிணை, 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில்
விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ Cineulagam
25 ஆண்டுகளாக பெண்ணை வீட்டு சிறையில் அடைத்து வைத்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை News Lankasri