வவுனியா பாடசாலைக்கு அருகில் குப்பைகளினால் துர்நாற்றம் : மக்கள் விசனம் (Photos)
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம், கற்குழி ஆகிய பகுதிகளில் நீண்ட நாட்களாக வீட்டுக் குப்பைகள் அகற்றப்படவில்லையெனவும், இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
பாடசாலைக்கு மாணவர்களை அழைத்து செல்லும்போது துர்நாற்றம் வீசுகின்றது. இதனை நீண்ட நாட்களாக அகற்றுவதற்கு எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
குப்பைகளை தரம் பிரித்து பைகளில் கட்டிவைக்குமாறு நகரசபை ஊழியர்களினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்ட நிலையிலும் அதனை அப்பகுதி மக்கள் பின்பற்றவில்லை.
இந்நிலையில், தரம் பிரித்து வழங்கும் குப்பைகளை எடுக்குமாறு நகரசபை அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக நகரசபை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
கற்குழி நகரசபை உறுப்பினரிடம் இது தொடர்பாக வினவியபோது, சபைக்கு இது குறித்து முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அகற்றுவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
நகரசபை ஊழியர்கள் பற்றாக்குறை, கண்காணிப்பாளரின் மேற்பார்வையில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளினால் நகரில் இவ்வாறான நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.



உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 21 மணி நேரம் முன்

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri
