நிலாவெளி கடற்கரையில் குவிந்து கிடக்கும் கழிவுகள்: முகம் சுழித்து வெளியேறும் சுற்றுலா பயணிகள்
திருகோணமலை - குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற நிலாவெளி கடற்கரையில் கழிவுகள் முறையான வகையில் அகற்றப்படாமல் தேங்கிக்கிடப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக அங்கு கடுமையான துர்நாற்றம் வீசி வருவதாக சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்களும் கவலை தெரிவித்துள்ளனர்.
சிறை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு இறுதி மரியாதை! கண்ணீருடன் விடுக்கப்பட்டுள்ள உருக்கமான கோரிக்கை
வெளியேறும் சுற்றுலா பயணிகள்
நேற்று (07) நிலாவெளி கடற்கரைக்கு வருகை தந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அனைவரும், இந்த துர்நாற்றம் காரணமாக பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியதுடன், அங்கிருந்து வெளியேறியதை காணக்கூடியதாக இருந்தது என அப்பகுதி பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நிலாவெளி உப பிரதேச சபைக்குட்பட்ட இந்த பகுதியானது, நாளாந்தம் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்லும் மிக முக்கியமானதொரு கடற்கரையாகும்.
இவ்வாறானதொரு சூழலில் கழிவுகள் சரியான முறையில் முகாமைத்துவம் செய்யப்படாமல் கடற்கரையிலேயே வீசப்பட்டுள்ளமையினால் அழுகி துர்நாற்றம் வீசி அதன் அழகையும் பெருமளவில் பாதிப்படைய செய்துள்ளது.
விடுத்துள்ள கோரிக்கை
நிலாவெளி கடற்கரையின் தூய்மையீனம் மற்றும் துர்நாற்றம் குறித்து அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலாத்துறையில் தொழில் புரிவோர் குச்சவெளி பிரதேச சபையின் கவனத்திற்கு இதனைக்கொண்டு சென்றுள்ளனர்.
சர்வதேச அளவில் பேசப்படும் ஒரு சுற்றுலாத்தலத்தில் இவ்வாறான அவலநிலை தொடர்வது அழகல்ல என்பதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, தேங்கிக்கிடக்கும் கழிவகளை அகற்றி கடற்கரையை தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.