வெளிநாடுகளில் பதுங்கியுள்ள குற்றக்கும்பல்: 43 பேருக்கு எதிராக சர்வதேச சிவப்பு அறிவிப்புகள்
வெளிநாடுகளில் பதுங்கியுள்ள குற்றக்கும்பலைச் சேர்ந்த 43 பேருக்கு எதிராக சர்வதேச சிவப்பு அறிவிப்புகள் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில்,

சர்வதேச சிவப்பு அறிவிப்புகள்
வெளிநாடுகளில் பதுங்கியுள்ள குற்றக்கும்பல்களில் அடையாளம் காணப்பட்ட மேலும் பலருக்கு எதிராக சர்வதேச சிவப்பு அறிவிப்புகள் பெறப்பட்டுள்ளன.
டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள குற்றக்கும்பலைச் சேர்ந்த "மன்னா ரமேஷ்" தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து டுபாய் அரசுடன் ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan