கொழும்பின் புறநகர் பகுதியில் குழு மோதல் - இளைஞன் கொடூரமாக படுகொலை
கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸ பகுதியில் இரண்டு குழுக்களுக்கு இடையிலான மோதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
அரலிய வீட்டுத் தொகுதி பகுதியில் நேற்று மாலை 2 இளைஞர்கள் மீது கூர்மையான ஆயுதங்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த இரு இளைஞர்களும் லுனாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குழு மோதல்
உயிரிழந்தவர் அங்குலான பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரு தரப்பினருக்கு இடையிலான தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த இளைஞனின் சடலம் லுனாவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக சிகிச்சை
காயமடைந்த மற்றைய நபர் மேலதிக சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் சந்தேக நபர்களைக் கைது செய்ய கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
புடின் - ட்ரம்ப் சந்திப்பு தேவை இல்லை... உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா முன்வைக்கும் யோசனை News Lankasri
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam
அப்பாவின் கார்பன் காப்பி... ஜாய் கிறிஸில்டாவின் புதிய பதிவு! சிக்கப்போகும் மாதம்பட்டி ரங்கராஜ் Manithan