25 ஆண்டுகளாகப் புனரமைக்கப்படாத திருகோணமலை கணேஷ் வீதி
திருகோணமலை - கணேசபுரம் பகுதியில் அமைந்துள்ள கணேஷ் ஒழுங்கை வீதி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக உரிய முறையில் புனரமைக்கப்படாமலும், முறையான வடிகால் வசதிகள் ஏற்படுத்தப்படாமலும் காணப்படுவதால், அப்பகுதி மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
குறிப்பாக, மழைக்காலங்களில் வீதியில் மழைநீர் தேங்கி நிற்பதுடன், சேறும் சகதியுமாக மாறுவதால் பொதுமக்களின் அன்றாடப் போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்படுவதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.
முறையான வடிகால் அமைப்பு
இப்பிரச்சினைக்குத் தீர்வாக, கணேஷ் ஒழுங்கையின் சுமார் 800 மீற்றர் நீளமான பிரதான வீதியை முழுமையாகப் புனரமைத்துத் தருவதுடன், மழைநீர் தேங்குவதைத் தடுக்கும் வகையில் சுமார் 200 மீற்றர் நீளத்திற்கு முறையான வடிகால் அமைப்பையும் ஏற்படுத்தித் தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வீதிப் புனரமைப்பு மற்றும் வடிகால் அமைத்தல் ஆகிய இரண்டு முக்கிய உட்கட்டமைப்புப் பணிகளும் அவசரமாக முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளதாகப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறித்த இடத்திற்கு நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்து, தேவையான அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் மக்கள் வலியுறுத்துகின்றனர்.

இலங்கையின் கிழக்கே வங்காள வளைகுடா கடல் பகுதியில் கொந்தளிப்பு! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
மின்னஞ்சலில் வந்த மிரட்டல்... ஐரோப்பிய நாடொன்றில் 6300 பாடசாலைகளில் மாணவர்கள் வெளியேற்றம் News Lankasri