கணேமுல்ல சஞ்சீவ கொலை விவகாரம்: சந்தேக நபர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த மூன்று சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த புதன்கிழமை (19) பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் கைதான சந்தேகநபர்களை எதிர்வரும் மார்ச் மாதம் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விளக்கமறியல்
சந்தேக நபர்கள் மூவரும் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் இன்று (24) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலியினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் பின்னணியில் உள்ளதாக கருதப்படும் 25 வயது சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியை கைது செய்ய நாடு முழுவதும் விசேட பொலிஸ் தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |