ஒஸ்மன் குணசேகரவை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு தொடர்பில் கைதான ஒஸ்மன் குணசேகரவை தடுத்து வைத்து விசாரண மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி ஒஸ்மன் குணசேகரவை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கணேமுல்ல சஞ்சீவவைக் கொல்வதற்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி கம்பஹா ஒஸ்மானுக்குச் சொந்தமானது என கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு இன்று (15.05.2026) கொழும்பு பிரதான நீதிபதி அசங்க எஸ். பொதரகமவிடம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் வாகனம் வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சி செய்தி - அடுத்தடுத்த வாரங்களில் ஏற்படப்போகும் விலை மாற்றம்
44வது சந்தேகநபராக பெயரிடப்பட்ட கம்பஹா ஒஸ்மான்
இச்சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்திற்கு மேலதிக தகவல்களை வழங்கிய கொழும்பு குற்றப்பிரிவு, கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் கம்பஹா ஒஸ்மான் 44வது சந்தேகநபராக பெயரிடப்படுவார் என்று தெரிவித்துள்ளது.

அவர் கைது செய்யப்பட்டு 72 மணிநேரத்திற்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த காலக்கெடு முடிந்த பின் மேலும் 90 நாட்களுக்கு விளக்கமறியலை தொடர அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் கொழும்பு குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இச்சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்திற்கு மேலதிக தகவல்களை வழங்கிய கொழும்பு குற்றப்பிரிவு, நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, இச்சம்பவத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய முதல் சந்தேக நபரானவர், குற்றத்தைச் செய்வதற்காக கம்பஹாவில் ஒஸ்மானிடம் இருந்த துப்பாக்கியை மற்றொரு இடத்திற்குச் சென்று பெற்றுள்ளார் என்று தெரிவித்தது.
மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி வைத்தியசாலையில்! மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
பிரித்தானிய அரசியலில் மாறிய காட்சிகள்: வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் முன்னாள் துணைப்பிரதமர் News Lankasri
ஹார்முஸ் நீரிணையில் இந்திய வணிகக் கப்பல் ஒன்று தாக்கி மூழ்கடிப்பு: பிடியை இறுக்கும் ஈரான் News Lankasri