ஐரோப்பா ஆசையில் கொலையில் சிக்கிய இஷாரா! விசாரணையில் வெளியான பகீர் தகவல்
ஐரோப்பாவுக்கு அனுப்புவதாக கெஹல்பத்தர பத்மே கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையிலேயே, சஞ்சீவ கொலையில் இஷாரா செவ்வந்தி ஈடுபட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஐரோப்பிய நாட்டுக்கு செல்வது தனது கனவு என கெஹல்பத்தர பத்மேவிடம் தொடர்ந்தும் இஷாரா தெரிவித்து வந்துள்ளார்.
தன்னை ஐரோப்பாவிற்கு அனுப்புவதாக பத்மே வாக்குறுதி அளித்ததால், சஞ்சீவவின் கொலைக்கு செய்ய உதவியமைக்காக எந்தப் பணத்தையும் பெற்றுக்கொள்ளவில்லை என இஷாரா, கெஹல்பத்தர பத்மேவிடம் குறிப்பிட்டுள்ளார்.
போலி கடவுச்சீட்டு
இஷாரா செவ்வந்திக்கு வாக்குறுதியளித்ததற்கமைய, இஷாராவுடன் கைது செய்யப்பட்ட ஜே.கே. பாயிடம் 65 லட்சம் ரூபாய் கொடுத்த கெஹல்பத்தர பத்மே, இஷாரா செவ்வந்திக்கு போலி கடவுச்சீட்டு தயாரித்து ஐரோப்பிய நாட்டிற்கு அனுப்ப திட்டமிட்டிருந்ததாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறு வயதிலிருந்தே கெஹல்பத்தர பத்மேவுக்கு போதைப்பொருள் விற்பனை செய்து வந்த இஷாரா, தனது வெளிநாட்டு கனவு குறித்து கெஹல்பத்தர பத்மேவிடம் தொடர்ந்து கூறி வந்தாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த வாரம் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி தற்போது கொழும்பு குற்றப்பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் சஞ்சீவவின் கொலை தொடர்பாக பல உண்மைகளை தற்போது வெளிப்படுத்தி வருகிறார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




