நாடளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்பட்ட கந்தசஷ்டி விரதம் (Video)
இந்துக்களின் மிக முக்கிய விரதங்களில் ஒன்றாக கருதப்படுவது கந்தசஷ்டி விரதமாகும்.
இதற்கமைய ஈழத்து திருச்செந்தூர் எனப்போற்றப்படும் மட்டக்களப்பு, திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் நேற்று (26.10.2022) கந்தசஷ்டி விரதம் ஆரம்பமாகியுள்ளது.
ஆலயத்தில் விசேட யாகம் மற்றும் அபிசேகம் சிறப்பான முறையில் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் முருகப்பெருமானுக்கு விசேட பூஜைகளோடு கந்தசஷ்டி விரதத்திற்கான கும்பம் வைக்கப்பட்டு விசேட பூஜைகள் நடைபெற்றுள்ளன.
மேலும் எதிர்வரும் 30ஆம் திகதி சூரன்போர் நடைபெறவுள்ளதுடன் 31ஆம் திகதி காலை கும்பம் சொரிதலுடன் விரதம் நிறைவுபெறவுள்ளது.
யாழ். மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம்
கந்தசஷ்டி விரதம் ஆரம்பமான நிலையில் யாழ். மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் பெருமளவான பக்த அடியவர்கள் ஆலயத்திற்கு வருகை தந்திருந்தனை அவதானிக்க முடிகின்றது.
ஆலயத்தில் ஆகம முறைப்படி வழிபாடுகள் நடந்துள்ளன.
இதற்கமைய நேற்று (26.10.2022) வசந்த மண்டப பூஜை இடம்பெற்று கந்தசுவாமி பெருமான் மயில் வாகனத்தில் உள்வீதியுலா வருகைதந்து பக்த அடியார்களுக்கு அளுள்பாலித்திருந்தார்.



