யாழ்ப்பாணத்தில் இசை ஆர்வலர்களை வளர்க்க ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளேன்: கந்தமூர்த்தி கலாரெஜி
யாழ்ப்பாணத்தில் உள்ள இசை ஆர்வலர்கள் , இசைத்துறையில் கல்வி கற்கும் மற்றும் இசைத்துறையில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு யாழ். இசைக்கருவியை இசைக்க பழகுவதற்கு தான் ஏற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக கந்தமூர்த்தி கலாரெஜி என்பவர் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம்(16) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இசைக்கருவியை வடிவமைக்கும் பணி
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“யாழ். இசைக்கருவியை உருவாக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு சிறுவயதில் இருந்து ஆர்வம் இருந்தது. யாழ்ப்பாணத்தின் அடையாளமாக யாழ். இசைக்கருவியே விளங்குகின்றது.
யாழ். இசைக்கருவியை பற்றிய வரலாறுகளை பல ஆண்டுகளாக தேடி அறிந்தே , யாழ். இசைக்கருவியை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டேன்.
இந்தியாவில் கேரளாவில் அங்குள்ள கலைஞர் ஒருவரினால் ஒரு யாழ். இசைக்கருவியை உருவாக்கினேன். அதே போன்று தென்னிலங்கையில் ஒரு கலைஞர் ஊடாக மற்றுமொரு யாழ். இசை கருவியை உருவாக்கியுள்ளேன்.
இதேபோன்று 10க்கும் மேற்பட்ட யாழ்.இசை கருவியை உருவாக்க உள்ளேன். யாழ்ப்பாணத்தை சேர்ந்த எமக்கு யாழ் இசைக்க தெரியாமல் இருப்பது வெட்ககேடாக உள்ளது.
யாழ்.பொது நூலகத்தில் உள்ள யாழ். இசைக்கருவியை பார்த்த வெளிநாட்டு தூதுவர் ஒருவர் இதனை யாரவது இசைப்பார்களா ?
எவருக்கும் அதனை இசைக்க தெரியவில்லை. அதனால் யாழ் இசைக்கருவியை இசைக்க கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன்.” என அவர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
எனது நகரத்திற்குள் அமெரிக்க அதிகாரிகளுக்கு அனுமதி இல்லை: கிண்டலுக்குள்ளான கனேடிய மேயர் News Lankasri
மில்லியன் வீரர்களுடன்... ஈரான் விடுத்த மிரட்டல்: மீண்டும் 10 நாள் அவகாசம் அறிவித்த ட்ரம்ப் News Lankasri