“ஒரே நாடு ஒரே சட்டம்” செயலணி விவகாரம்: முதல் முறையாக தகவல் வெளியிட்டுள்ள ஞானசார தேரர்
ஒரே நாடு ஒரே சட்டம் குறித்த ஜனாதிபதி செயலணியின் உத்தேச சட்ட வரைவில் பொதுபல சேனா இயக்கத்தின் கொள்கைகள் உள்ளடக்கப்பட உள்ளதாக செயலணியின் தலைவர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,
பொதுபல சேனாவினால் கடந்த காலங்களில் எழுப்பப்பட்ட பிரச்சினைகள் இன்றளவிலும் கவனிக்கப்பட வேண்டியவையாகவே காணப்படுகின்றது.
பொதுபல சேனா புதிய பாத்திரம் ஏற்றுள்ளதாகவும், தொடர்ந்தும் செயற்பாடுகளை முன்னெடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து இந்த செயலணிக்கு தெளிவு உண்டு என்றும் அவர் தெரிவித்தார்.
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri