மனைவியை காப்பாற்ற போராடிய கணவன் படுகொலை - பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சந்தேகநபர்
கம்பஹாவில் கொலை குற்றச்சாட்டுடன் தொடர்புடைய நபர் ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காக உயிரிழந்துள்ளார்.
கம்பஹா - பஹலகம வீதியில் பயணித்த பெண் ஒருவரின் பை மற்றும் தங்க நகையை கொள்ளையடித்த சம்பவத்தில், கொள்ளை தடுக்க முயன்ற பெண்ணின் கணவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொன்ற நபர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
பொலிஸார் துப்பாக்கி சூடு

கொட்டுகொட பிரதேசத்தில் வைத்து சந்தேக நபரை கைது செய்ய சென்ற போது கூரிய ஆயுதத்தால் தாக்க முற்பட்டமையினால் குறித்த நபர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பெண் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேக நபர் கடந்த 20ஆம் திகதி மதியம் வீதியில் சென்று கொண்டிருந்த பெண்ணின் தங்க நகை மற்றும் கைப்பையை திருடிச் செல்ல முயற்சித்துள்ளார்.
குறித்த பெண் கைப்பையைக் கொள்ளையடிக்கும் போது அதனை அந்த பெண் இறுக்கமாக பிடித்திருந்ததால், மோட்டார் சைக்கிளுடன் அருகில் இருந்த வாய்க்காலில் கொள்ளையடிக்க வந்த நபர் மற்றும் பெண் விழுந்துள்ளனர்.
கணவன் கொலை

குறித்த பெண்ணின் வீட்டிற்கு அருகாமையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன் போது வீட்டில் இருந்த அவரது கணவர் மற்றும் தந்தை அவரது அலறல் சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு வந்தனர்.
அங்கு அந்த பெண்ணின் கணவர் மற்றும் தந்தையை கொள்ளையில் ஈடுபட்ட நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.
சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் பின்னர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பெண்ணின் கணவர் உயிரிழந்துள்ளார்.
பைசன் படத்தில் நடிப்பதற்காக துருவ் விக்ரம் எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam
இன்னும் 4 நாட்களில் எதிர்பாராத அளவு செல்வத்தை கொடுக்கும் சுக்கிரன் பெயர்ச்சி- உங்களுக்கும் லக் இருக்கா? Manithan