தாயினால் விஷம் கொடுக்கப்பட்ட ஐந்து வயது குழந்தை உயிரிழப்பு!
தாய் கொடுத்த விஷத்தினை அருந்தியதால் கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஐந்து வயது குழந்தை இன்று காலை உயிரிழந்துள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லொலுகொட பிரதேசத்தை சேர்ந்த கேஷான் என்ற ஐந்து வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும் தாய் தனது இரண்டு பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு தானும் விஷத்தினை உண்ட நிலையில் ஆபத்தான நிலையில் வட்டுப்பிட்டியால வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பிரதேசத்தின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மற்றுமொரு எட்டு வயது குழந்தையும் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியாக நடிக்கும் நடிகை ஸ்ரீஜா தனது கணவருடன் எடுத்த அழகிய போட்டோஸ் Cineulagam
நான் குட்டை உடை அணிந்த புகைப்படம் வெளியானதும் அவ்ளோ பிரச்சனை... சீரியல் நடிகை பரீனா ஆசாத் Cineulagam