காட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பெண்!
கம்பளை - அம்புலுவா காட்டுப்பகுதியில் மூன்று நாட்களாக கூச்சலிட்டுக்கொண்டிருந்த பெண் ஒருவரை கம்பளை தலைமையக பொலிஸார் நேற்று (02.05.2023) கண்டுபிடித்துள்ளனர்.
குறித்த பெண் கடந்த மூன்று நாட்களாக ஒதுக்கப்பட்ட வனப்பகுதியில் நிர்வாணமாக இவ்வாறு கூச்சலிட்டுக்கொண்டிருந்துள்ளார்.
இதன்போது அந்த வழியாக சென்றவர்கள் பெண் ஒருவரின் அலறல் சத்தம் கேட்பதாக கம்பளை தலைமையக பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
கம்பளை வைத்தியசாலையில் அனுமதி
இதனை தொடர்ந்து கம்பளை தலைமையக பொலிஸாரின் பெண் உத்தியோகத்தர்கள் குழுவொன்று சம்பவ இடத்திற்கு விரைந்து அந்த பெண்ணுக்கு ஆடை அணிவித்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று பின்னர் கம்பளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பிரதேசத்தின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த பெண்ணின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும், இந்த பெண்ணின் அடையாளத்தை கண்டறிய பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.