மகிந்தவின் வீட்டில் நள்ளிரவில் காத்திருந்த மக்கள் - ஜே.வி.பியால் பாதிக்கப்பட்ட பெற்றோர் கதறல்
பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்தபோது முறைப்பாடு ஒன்றை வழங்கியுள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ஒருவர் காணாமல் போனதாக அவர் முறைப்பாடு செய்துள்ளார்.
பெலவத்தையில் காணாமல் போன இந்தத் தலைவரை உடனடியாகக் கண்டுபிடிக்குமாறு உதய கம்மன்பில கோரிக்கை விடுத்துள்ளார்.
கார்ல்டன் வீட்டிற்கு வந்து பல முறைப்பாடு
கம்மன்பிலவின் முறைப்பாட்டினை புரிந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச புன்னகையுடன் பதிலளித்துள்ளார்.
கடந்த கால நிகழ்வுகளை நினைவு கூர்ந்த மகிந்த ராஜபக்ச, 1988-89ஆம் ஆண்டு காலத்தில், மக்கள் விடுதலை முன்னியில் காணாமல் போன இளைஞர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கார்ல்டன் வீட்டிற்கு வந்து பல முறைப்பாடுகளை செய்துள்ளதாக கூறியுள்ளார்.
அவர்கள் நள்ளிரவில் கார்ல்டன் வீட்டிற்கு வந்து, விடியற்காலை வரை இந்த வீட்டில் இரவை கழித்ததாகவும், காணாமல் போன தங்கள் பிள்ளைகள் பற்றிய தகவல்களை வழங்கியதாகவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, நினைவு குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு வந்த அனைத்து முறைப்பாடுகளை உடனடியாக விசாரிக்க நடவடிக்கை எடுத்ததாகவும் மகிந்த ராஜபக்ச இதன்போது தெரிவித்துள்ளார்.





இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை முழுமையாக நிறுத்திய ஜேர்மனி - அரசியல் மாற்றத்திற்கு அடையாளம் News Lankasri

தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
