தென்னிலங்கையில் ஏற்பட்ட மாற்றம் - கம்மன்பிலவின் வாழ்வை மாற்றிய பிள்ளையான்
பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும், சட்டத்தரணியுமான உதய கம்மன்பில, ராஜபக்சக்களை ஓரங்கட்டிவிட்டு போரை வென்ற தேசபக்தர் என, முன்னாள் ராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனை (பிள்ளையான்) குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத தடை சட்டத்தின் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையானை, சட்டத்தரணியான கம்பன்பில சந்தித்த பின்னர், அவரின் வாழ்க்கையில் திரும்புமுனை ஏற்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அரசியல்வாதியாக பிரபலம் அடைந்துள்ள கம்பன்பில, சட்டத்தரணியாக முதன்முறையாக செயற்படும் தருணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நீதிமன்ற நடவடிக்கை
தனது கட்சிக்காரர் தொடர்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டிய பல உண்மைத் தகவல்களை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியதன் மூலம், அரசியல்வாதியின் வேடத்தையும் கம்பன்பில பின்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்புக்காவல் உத்தரவு நடைமுறையில் இருக்கும் வரை உதய கம்மன்பில, பிள்ளையானின் சட்டத்தரணியாக இருப்பார் எனவும் நீதிமன்றங்களில் தொடர்புடைய வழக்குகள் விசாரிக்கப்படும் போது மற்றொரு சட்டத்தரணி தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும் அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தேசபக்தர்
கடந்த காலங்களில் சில அரசியல் சம்பவங்கள் தொடர்பாக பிள்ளையான் தனது அறிக்கையை வெளியிடும் போது உண்மையை சொல்லியிருந்தால், அது கம்மன்பில தரப்பினருக்கு மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்தியிருக்கும்.
இந்நிலையில் உதய கம்மன்பில பிள்ளையானை ஒரு தேசபக்தர் என முத்திரை குத்தும் அளவுக்குச் சென்றுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

மகாநதியை தொடர்ந்து விஜய் டிவியில் மாற்றப்படும் 2 சீரியல்களின் நேரம்.. எந்தெந்த தொடர் தெரியுமா? Cineulagam

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam
