சம்பத் மனம்பேரி தொடர்பில் திடுக்கிடும் கருத்துக்கள் வெளியிட்ட கம்மன்பில
பொதுஜன பெரமுனவின் அங்குணுகொலபெலஸ்ஸ பிரதேச சபை வேட்பாளர் சம்பத் மனம்பேரி கெஹல்பத்தர பத்மேவின் உறவினராவார் என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மமன்பில தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டிலிருந்து நிகழ்நிலையில் இணைத்தள தொலைக்காட்சிக்கு பேசும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில், மித்தெனியவில் தோண்டி எடுக்கப்பட்ட வெள்ளை கற்கள் ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பதற்கு கொண்டு வரப்பட்ட இராசாயனங்கள் என்பது அவருக்கு துளியளவும் தெரியாது.
ஏனைய தொழிற்துறைகளுக்கு பயன்படுத்துவதால்
ஐஸ் போதை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் மெத்தன் பெட்டமின் 'methane and butylamine'இரசாயனங்கள் தொடர்பில் சம்பத் மனம்பேரிக்கு தெரியாது. மெத்தன் பெட்டமின் என்ற இரசாயனம் 50 வருடங்களாக மருந்தாக பயன்படுத்துவதாகும்.
அதாவது அதிதுடிப்புள்ள பிள்ளைகளுக்கும் எந்நேரமும் எதாவது செய்து கொண்டிருக்கும் பிள்ளைகளுக்கு அவர்களின் துடிப்பை குறைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட மருந்தாகும்.
அண்மைக் காலமாகவே இதை போதைப்பொருளாக பயன்டுத்த தொடங்கியுள்ளனர். 2008ஆம் ஆண்டு ஐஸ் போதை பொருள் தயாரிப்பதற்கு தேவையான இராசாயனங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.
ஏனென்றால் ஐஸ் என்ற போதை இரசாயனங்களை கொண்டு தயாரிப்பதாகும். ஆனாலும் சில இரசாயனங்களை தடைசெய்ய முடியாது. அவை ஏனைய தொழிற்துறைகளுக்கு பயன்படுத்துவதால் ஆகும்.
2022 ஆம் ஆண்டு தடைசெய்யப்பட்ட மெத்தன் பெட்டமின்
அத்தோடு 2022 ஆம் ஆண்டு மெத்தன் பெட்டமின் என்ற இரசாயனம் இலங்கைக்கு கொண்டு வருவது தடுக்கப்பட்டது.நேரடியாக ஐஸ் போதைப்பொருளை கொண்டு வருவது சட்டவிரோதமானது என்பதாலே கெஹல்பத்தர பத்மே இரசாயனங்களை இறக்குமதி செய்து நுவரெலியாவில் ஐஸ் தொழிற்சாலை அமைத்துள்ளார்.
2023 ஒக்டோபர் 07ஆம் திகதி இந்த மெத்தன் பெட்டமின் ஈரான் துறைமுகத்தில் இலங்கைக்கு ஏற்றுமதி செய்யும் போதே "Drug Enforcement Administration," DEA அமெரிக்க நிறுவனம் இலங்கைக்கு புலனாய்வு தகவலை அனுப்பியுள்ளது.
அப்போது இலங்கை பொலிஸாரும் குறித்த இரு கொல்கலன்களை சுங்கத்தில் நிறுத்தி வைத்துள்ளது. ஆனால் ஜனவரியில் கொல்கலன்கள் தேங்கிய சூழலில் இவை வெளியில் விடப்பட்டுள்ளன.
அப்போதும் பொலி்ஸ்மா அதிபருக்கு தனிப்பட்ட ரீதியில் இரு கொள்கலன்களில் ஐஸ் போதைக்கான இரசாயனங்கள் வெளியில் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பரிசோதனை செய்யப்படவில்லை.கெஹல்பத்தர பத்மே உட்பட ஐவர் பிடிபட்ட பின்னர் அவர்கள் வழங்கிய வாக்குமூலத்தில் இது தொடர்பில் தெரிவித்துள்ளார்.
அதை பாதுகாப்பு பிரதியமைச்சர் ஊடக சந்திப்பில் வெளிப்படுத்திய போது,கெஹல்பத்தர பத்மே சம்பத் மனம்பேரிக்கு வழங்கிய வெள்ளை கற்களும் இவ்வாறான இரசாயனங்களா? என்ற பயத்தில் மனம்பேரி அனைத்து கற்களையும் புதைத்துள்ளார்.
ஆனால் கற்களுக்குள் மறைத்து கொண்டுவரப்பட்ட மெத்தன் பெட்டமில் என்ற இரசாயனங்கள் எடுக்கப்பட்ட பின்னரே மனம்பேரிக்கு கற்களை விற்றுக் கொள்ளுமாறு 'பத்மே' கொடுத்துள்ளதாகவே தெரிகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



