இந்திய அணி தொடர்பான விமர்சனங்கள் குறித்து சாடிய கம்பீர்
தனது அணி ஒவ்வொரு ஆட்டத்திலும் விளையாடும் போது விமர்சித்தவர்களை, இந்திய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் (Gautam Gambhir) கடுமையாக சாடியுள்ளார்.
செம்பியன் கிண்ண அரையிறுதியில், அவஸ்திரேலியாவை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பின்னர், அவர் இந்த கடும் கருத்துக்களை வெளியிட்டார்.
நடுநிலையான மைதானம்
துபாயில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா, தென்னாப்பிரிக்கா அல்லது நியூசிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது.
இந்த நிலையில், வேறு எந்த அணியைப் போலவே தங்களுக்கும் ஒரு நடுநிலையான மைதானமாக துபாய் மைதானம் இருந்தது என்று கம்பீர் செய்தியாளர்களிடம் கூறினார்,
இந்தியா மற்ற அணிகளை விட எந்த நன்மையையும் அனுபவிக்கவில்லை, ஏனெனில் அவர்கள் சொந்த மண்ணில் விளையாடவில்லை என்று கம்பீர் தெரிவித்தார்.
இந்திய அணி, துபாய் மைதானத்தில் ஒரு நாள் கூட பயிற்சி செய்யவில்லை. ஐசிசி கல்லூரியிலேயே பயிற்சிகளை மேற்கொண்டது.
அங்குள்ள விக்கெட்டுகளையும் இங்குள்ள விக்கெட்டுகளையும் பார்த்தால், தரைக்கும் வானத்திற்கும் உள்ள வித்தியாசம் தெரியும் என்றும் கம்பீர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
