ரோஹித் சர்மாவுக்கு கொழுப்பு அதிகம்..! காங்கிரஸ் பேச்சாளரின் சர்ச்சை பதிவு
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் ரோஹித் சர்மாவுக்கு, "விளையாட்டு வீரராக கொழுப்பு அதிகம்" என்று, காங்கிரஸ் கட்சியின் தேசிய பேச்சாளர் ஷாமா முகமது கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பதிவு பரவலான விமர்சனங்களைத் தூண்டியதால், கட்சியின் தலைமை, உடனடியாக தலையிட்டு, அந்த பதிவை நீக்குமாறு கேட்டுக் கொண்டது.
ரோஹித் சர்மா
இதன் அடிப்படையில், அந்தப் பதிவு பின்னர் நீக்கப்பட்டது. "ரோஹித் சர்மா ஒரு விளையாட்டு வீரராக அதிக கொழுப்பை கொண்டிருக்கிறார்.
அவர் எடையைக் குறைக்க வேண்டும்! நிச்சயமாக, அவர், இந்தியா இதுவரை கண்டிராத மிகவும் ஈர்க்க முடியாத தலைவர் " என்று அவர் நீக்கிய பதிவில் கூறப்பட்டுள்ளது.
அவரது கருத்துக்கள் உடனடியாக பாரதிய ஜனதா தலைவர்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்களிடமிருந்து எதிர்வினையைப் பெற்றன.
ஷர்மாவை "உலகத் தரம் வாய்ந்த வீரர்" என்று அழைத்த ஒரு பயனருக்கு பதிலளித்த முகமது, அந்தக் கூற்றை நிராகரித்தார், இந்திய கிரிக்கெட் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், எம்எஸ் தோனி, விராட் கோலி மற்றும் கபில் தேவ் போன்றவர்களுடன் ஒப்பிட்டு, ஷாமா, ரோஹித்தை கேள்விக்குள்ளாக்கினார்.
அவரது முன்னோடிகளுடன் ஒப்பிடும்போது அவர் உலகத் தரம் வீரர் அல்ல. அவர் ஒரு சாதாரண தலைவர். அதே போல் இந்தியாவின் தலைவராக இருக்கும் அதிர்ஷ்டம் பெற்ற ஒரு சாதாரண வீரர் என்று ஷாமா எழுதியுள்ளார்.
எச்சரிக்கை
முகமதுவின் கருத்துகளை பாரதிய ஜனதா உடனடியாகக் கண்டித்தது, காங்கிரஸ் "உடல் அவமானப்படுத்துதல்" மற்றும் உலகக் க கிண்ணம் வென்றவரை அவமரியாதை செய்ததாகக் குற்றம் சாட்டியது.
எனினும், ஷாமா முகமது தனது கருத்தை ஆதரித்து, தனது ட்வீட் டை பதிவிட்டுள்ளார் அதில், தமது பதிவு, ஒரு தடகள வீரரின் உடற்தகுதி குறித்த பொதுவான அவதானிப்பு என்றும், உடலை அவமானப்படுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பம் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார் இது உடலை அவமானப்படுத்துவது அல்ல.
ஒரு விளையாட்டு வீரர் எப்போதும் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்று நான் நம்பினேன் எனினும், அவர் சற்று அதிக எடை கொண்டவர் என்று உணர்ந்தேன், அதனால் நான் அதைப் பற்றி ட்வீட் செய்தேன்," என்று விமர்சனங்களுக்கு எதிராக ஷாமா தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.
இந்தநிலையில், ஷாமா முகமதுவின் கருத்துக்களிலிருந்து காங்கிரஸ் விலகிக்கொள்வதாகவும், கட்சி, விளையாட்டு நட்சத்திரங்களின் பங்களிப்புகளை மிக உயர்ந்த மதிப்பில் கருதுகிறது என்றும் காங்கிரஸ் தலைவர் பவன் கேரா கூறியுள்ளார்.
ஷாமா முகமதுவின் பதிவை நீக்குமாறு கட்சி கேட்டுக் கொண்டதாகவும், "எதிர்காலத்தில் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவருக்கு அறிவுறுத்தியதாகவும்" Projected தலைவர் பவன் கேரா தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
