ஐரோப்பிய ஒன்றியத்திற்கு காலி முகத்திடல் சம்பவம் தொடர்பில் தெளிவுபடுத்தப்படும்: அலி சப்ரி
இவர் நேற்று(24) பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
படையினரால் தாக்கப்பட்டவர்கள் கிளர்ச்சியாளர்களே தவிர போராட்டக்காரர்கள் அல்ல-ரணில் விளக்கம் |
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிப்பதாவது,
போராட்டம் தொடர்பில் தெளிவுபடுத்த அரசாங்கம் நடவடிக்கை
''அண்மையில் காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் பிழையாக விளங்கிக் கொண்டிருந்தால் அதனை தெளிவுபடுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.
இந்த விவகாரம் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளிநாட்டு ராஜதந்திரிகளுக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.
அமைதியான போராட்டக்காரர்களின் போராட்டங்களை ஜனநாயக ரீதியாக மதிக்கும் அரசாங்கம் என்ற வகையில் அதற்கான உரிமையையும் சுதந்திரத்தையும் முழுமையாக வழங்கத் தயார்.
எனினும், நாட்டின் நிர்வாக அலகுகளை கையகப்படுத்தி அரசாங்க செயற்பாடுகளை பாதிப்படையச் செய்ய அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.