சிறைக்குள் இருக்கும் கைதிகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சிக் காணொளி..
காலி - பூஸ்ஸ சிறைச்சாலையில், கைதி ஒருவர் கையடக்க தொலைபேசி பயன்படுத்திக் கொண்டு சொகுசாக இருப்பது போன்ற ஒரு காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
கையடக்க தொலைபேசி பயன்படுத்திக்கொண்டு, போதைப்பொருள் பாவிப்பது போலவும், மற்றுமொரு கைதி அவருடைய தலையை மசாஜ் செய்து விடுவது போலவும் குறித்த காணொளியில் பதிவாகியுள்ளது.
பூஸ்ஸசிறைச்சாலை
மேலும், அந்த கைதி பூஸ்ஸசிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களின் உறுப்பினர் என்றும் சமூக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், குறித்த விவகாரம் தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், அது பூஸ்ஸ சிறைச்சாலை அல்லவென்று சிங்கள ஊடகமொன்றிடம் சிறைச்சாலை அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
எனினும், குறித்த சம்பவம் தொடர்பாக உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு பூஸ்ஸ மற்றும் அங்குணுகொலபெலஸ்ஸ சிசை்சாலைகளின் அத்தியட்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சாப்பிட்ட KFC எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல்: இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ. 9.2 லட்சம் அபராதம் News Lankasri
மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! Manithan
ஜேர்மனியை பிரித்தானியா முதலான நாடுகளுடன் இணைக்கும் புதிய எரிவாயுக்குழாய் திட்டம் துவக்கம் News Lankasri