காலிமுகத்திடல் போராட்டக்காரர்களையும் தூக்கிலிட வேண்டும்! நாடாளுமன்ற உறுப்பினர் ஆவேசம்-செய்திகளின் தொகுப்பு
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குற்றவாளிகளையும், காலிமுகத்திடல் போராட்டக்காரர்களையும் மக்கள் முன்னிலையில் தூக்கிலிட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஜோன்சன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தமைக்கு இந்த இரண்டு தீவிரவாதத் தரப்பினர்களே முக்கியமான காரணகர்த்தாக்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினமன்று நடத்தப்பட்ட தாக்குதலின் குற்றவாளிகளுக்கு இன்னமும் உரிய தண்டனை வழங்கப்படவில்லை. தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்கள் நீதி வேண்டி அலைந்து திரிகின்றார்கள் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடனும் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு