காலிமுகத்திடலில் தொடரும் போராட்டம்: சட்டி உடைத்து எதிர்ப்பினை வெளிப்படுத்தும் மக்கள் (video)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் பதவி விலக வேண்டும் என கோரி கொழும்பு காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் 10 நாட்களாக தொடர்ந்து வருகின்றது.
அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த போராட்டத்திற்கு நாடளாவிய ரீதியில் பல்வேறு பாகங்களிலும் இருந்து ஆதரவு வழங்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில்,ஜனாதிபதி,பிரதமர்,நாடாளுமன்ற உறுப்பினர்கள்,அமைச்சர்கள் சிலரின் உருவப்படங்களை முகத்தில் முகமூடிகளாக அணிந்து சட்டி உடைத்து அரசாங்கத்திற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதேவேளை, போராட்டக் காரர்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிகொடுக்காத நிலையில் நேற்றையதினம் கொழும்பு காலி முகத்திடலில் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்காக மாந்திரீக பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri