ராஜபக்ச நிழல் அரசாங்கத்தின் கொடூரமான தாக்குதல்! சஜித் குற்றச்சாட்டு
நிராயுதபாணியான காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது ராஜபக்ச நிழல் அரசாங்கம் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த குற்றச்சாட்டை எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த நிலையில், தாக்குதலுக்கு உத்தரவிட்டது மற்றும் திட்டமிட்டது யார் என்பது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று பிற்பகல் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர்,
இராணுவத்தினர் மீது தாக்குதல்
இந்த சம்பவத்தின் போது பொதுமக்கள்,பெண்கள்,அங்கவீனமடைந்துள்ள இராணுவத்தினர் உள்ளிட்டோர் தாக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதல் தொடர்பான பொறுப்பில் இருந்து ஜனாதிபதி விலகிச்செல்ல முடியாது என குறிப்பிட்ட அவர், அரசாங்க அனுசரணையுடன் வன்முறைக்கு உத்தரவு பிறப்பித்தது யார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கையின் கள நிலவரங்களை சேகரிக்கும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதன் மூலம், சுற்றுலாவை ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் வழி இதுதானா என்றும் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ்
அழகப்பெரும, சம்பவங்களை தனிமைப்படுத்தப்பட்ட சம்பவமாக நிராகரிக்க முடியாது.
இது ஜனநாயகத்தை நசுக்குவதற்கான ஒரு படியாக இருக்கலாம் என்று சந்தேகம்
வெளியிட்டுள்ளார்.



