காலி முகத்திடலில் தாக்குதல் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் கடும் கண்டனம்
காலி முகத்திடலில் போராட்டக்களத்தின் மீது இன்று அதிகாலை தொடுக்கப்பட்ட தாக்குதல் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது,
அறவழியில் போராடிக் கொண்டிருந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது.
A cowardly assault against PEACEFUL protestors, who agreed to vacate the sites today; A useless display of ego and brute force putting innocent lives at risk & endangers Sri Lanka’s international image, at a critical juncture. https://t.co/E6g9lEUgV1
— Sajith Premadasa (@sajithpremadasa) July 22, 2022
இன்றைய தினம் அவர்கள் குறித்த இடத்திலிருந்து தங்கள் போராட்டத்தை மீளப்பெறத் தீர்மானித்திருந்த நிலையில் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
காலிமுகத்திடலில் இருந்து திடீரென சென்ற பொலிஸார்! சிறிது நேரத்தில் குவிந்த படையினர் - நேரடி ரிப்போர்ட் (Video) |
மிலேச்சத்தனம் மற்றும் ஆணவம் ஆகியன மூலமாக உந்தப்பட்ட இந்தத் தாக்குதல் காரணமாக அப்பாவிகளின் உயிர்கள் ஆபத்தை எதிர்கொண்டிருந்தது.
அத்துடன் மிக இக்கட்டான தருணமொன்றில் இலங்கையின் நற்பெயரை சர்வதேச ரீதியாக கெடுக்கும் வகையிலும் இந்தச் செயற்பாடு நடைபெற்றுள்ளது என்றும் சஜித் பிரேமதாச கண்டனம் தெரிவித்துள்ளார்.