ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான சட்ட விரோதமான வன்முறைப் பிரயோகங்கள் நிறுத்த வேண்டும்: மனித உரிமைகள் கண்காணிப்பகம்
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான அனைத்து சட்ட விரோதமான வன்முறைப் பிரயோகங்களையும் நிறுத்த வேண்டும், தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரியுள்ளது.
அத்துடன் துஷ்பிரயோகங்களுக்கு காரணமானவர்களை விசாரித்து உரிய முறையில் சட்ட நடவடிக்கை எடுக்க, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாதுகாப்புப் படையினருக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
மீனாட்சி கங்குலி கோரிக்கை
மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய இயக்குனர் மீனாட்சி கங்குலி இந்த கோரிக்கைகளை விடுத்துள்ளார்.
பதவியேற்ற ஒரு நாளுக்குப் பின்னர், கொழும்பின் மையத்தில் அமைதியான போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினரின் கொடூரமான தாக்குதலுக்கு ஜனாதிபதி விக்ரமசிங்க உத்தரவிட்டமையானது, புதிய அரசாங்கம் சட்டத்தின் ஆட்சியை விட, மிருக பலத்தின் மூலம் ஆட்சியை செயற்படுத்த விரும்புகிறது என்ற ஆபத்தான செய்தியை இலங்கை மக்களுக்கு அனுப்புகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், இலங்கையின் சர்வதேச பங்காளிகள், இலங்கை மக்களின் உரிமைகளை நசுக்கும் நிர்வாகத்தை ஆதரிக்க முடியாது என்ற செய்தியை உரத்த குரலில் அனுப்ப வேண்டும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய இயக்குனர் மீனாட்சி கங்குலி வலியுறுத்தியுள்ளார்.
முப்படையினருக்கும் பொலிஸாருக்கும் சிறப்பு அதிகாரம்! |