கொழும்பு வன்முறை சம்பவம் தொடர்பில் தொடரும் கைது
கடந்த ஒன்பதாம் திகதி கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கம அறவழிப் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தில் இதுவரை 1800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப்பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
நேற்றைய தினமும் 70 வரையில் கைது செய்யப்பட்டு 40 பேர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு வன்முறை சம்பவம்
வன்முறைச் சம்பவம் தொடர்பாக 854 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அதன் பிரகாரம் கைது செய்யப்பட்டவர்களில் 831 பேர் தற்போதைக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தொடர்ந்தும் அறிவித்துள்ளது.
எனினும் அறவழிப் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலை மேற்கொண்டவர்களில் இருபதுக்கும் குறைவானவர்களே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வன்முறையாளர்களை திருப்பித் தாக்கிய பொதுமக்களே பெருமளவில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.