மைனா கோ கமவை தொடர்ந்து உருவாகும் நோ டீல் கம
அலரி மாளிகைக்கு முன்பாக இன்று காலை போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், குறித்த போராட்ட கிராமத்திற்கு ‘நோ டீல் கம’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
யார் பிரதமராக பதவியேற்றாலும் தமக்கு நியாயம் வேண்டும் என தெரிவித்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அதே சமயம், அண்மையில் இடம்பெற்ற வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் எனவும் போராட்டக் காரர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
கடந்த சில நாட்களாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை இராஜினாமா செய்யுமாறு கோரி மைனா கோ கம என்றழைக்கப்படும் கிராமமொன்று உருவாக்கப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், அவரது இராஜினாமாவைத் தொடர்ந்து மைனா கோ கம கிராமம் அகற்றப்பட்டிருந்தது.
இதேவேளை, புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ள நிலையில், பிரதமர் அலுவலகத்தில் அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan
