புதிய பிரதமராக ரணில் பதவியேற்றுள்ள நிலையில் உருவெடுத்துள்ள மற்றுமொரு போராட்டம் (Video)
அலரி மாளிகைக்கு முன்பாக மற்றுமொரு புதிய போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யார் பிரதமராக பதவியேற்றாலும் தமக்கு நியாயம் வேண்டும் என தெரிவித்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
அதே சமயம், அண்மையில் இடம்பெற்ற வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் எனவும் போராட்டக் காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், தற்போதுள்ள நெருக்கடியை உடனடியாக தீர்த்து நீதி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி விஷ்வரூபம் எடுத்துள்ள நிலையில் ஏற்பட்ட வன்முறைகள் காரணமாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகியிருந்தார்.
இந்தநிலையில் நேற்றையதினம் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதைத் தொடர்ந்து இன்று இவ்வாறு புதிய போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan

முஸ்லீம்களுக்கு எதிராக திரும்புவதை நாங்கள் விரும்பவில்லை: கணவனை இழந்த பெண் கண்ணீருடன் பேட்டி News Lankasri
