காலிமுகத்திடல் பகுதியில் குவிக்கப்பட்ட பொலிஸ் வண்டிகள் திடீர் மாயம் (Video)
காலிமுகத்திடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொலிஸ் வண்டிகள் திடீரென அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த பொலிஸ் வண்டிகள் எதற்காக அந்த இடத்தில் குவிக்கப்பட்டிருந்தன என்பது தொடர்பில் அதிகாரபூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
எனினும் இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருந்தன.
இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே குறித்த பொலிஸ் வண்டிகள் திடீரென அகற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
கொழும்பில் காலிமுகத்திடல் பகுதியில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் பகுதியில் பல பொலிஸ் வண்டிகள் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான புகைப்படமொன்றும் தற்போது அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
கொழும்பு, காலிமுகத்திடல் போராட்டமானது இன்று ஒன்பதாவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையிலேயே பொலிஸ் வண்டிகள் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், காலிமுகத்திடல் பகுதியில் மக்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் குறித்த தொடர் போராட்டத்திற்கு இலங்கையின் பிரபலங்கள் பலரும் தமது ஆதரவை தெரிவித்து வருகின்றனர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.