கொட்டும் மழையிலும் இரண்டாவது நாளாக ஜனாதிபதி செயலகம் முற்றுகை - தொடரும் போராட்டம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இன்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை 9 மணிக்கு ஆரம்பமான போராட்டம் 2வது நாளாக தொடர்ந்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள பலர் அங்கிருந்து வெளியேறாத நிலையில் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. ஜனாதிபதி உள்ளிட்டவர்கள் பதவி விலக வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Galle Face Green protest continues despite massive rain #SriLankaCrisis #SriLanka #SriLankaEconomicCrisis #SriLankaProtests #SriLankaProtest pic.twitter.com/Ep3FIxwiNw
— Siraj Noorani (@sirajnoorani) April 9, 2022





உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri
