கொடூரமாக சித்தரிக்கப்படும் ராஜபக்சவினரின் உருவங்கள் (Video)
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் காரணமாக அதிருப்திக்குள்ளான மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக வீதிக்கிறங்கி போராடி வருகின்றனர்.
நாளுக்கு நாள் போராட்டக் களங்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்லும் அதே சமயம் அரசாங்கத்திற்கு எதிரான கோஷங்களும் வலுப்பெற்று வருகின்றன.
அந்த வகையில் போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்கள் தங்களது போராட்ட வடிவங்களையும் மாற்றி வருகின்றனர். பாரம்பரிய கலைகளைப் பயன்படுத்தி, வாத்தியக் கருவிகளைப் பயன்படுத்தி, இசையைப் பயன்படுத்தி, வீதி நாகங்கள் ஊடாக தமது எதிர்ப்பினை அரசாங்கத்திற்கு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கொழும்பு காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டக் களத்தில் இன்று வித்தியாசமான வகையில் ஓவியங்களை வரைந்து தமது எதிர்ப்பினை பல்கலைக்கழக மாணவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
ராஜபக்ச சகோதரர்களின் உருவப் படங்களை மிகவும் கொடூரமான முறையில் சித்தரிக்கும் வகையில் இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத பல விடயங்களை இவர்களின் ஓவியங்கள் வெளிப்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பதினாறாவது மே பதினெட்டு 20 மணி நேரம் முன்

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
