கலஹா முதல் நுவரெலியா வரை சுற்றுலா நடைப்பாதை
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்வக்கூடிய வகையில் சிறப்பு நடைப்பாதை ஒன்று கலஹா முதல் நுவரெலியா வரை நிர்மாணிக்க எதிர்பார்த்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
300 கிலோ மீற்றர் நீளம் கொண்ட நடைப்பாதை
இந்த நடைப்பாதையானது 300 கிலோ மீற்றர் நீளத்தை கொண்டிருக்கும். கலஹா பிரதேசத்தில் ஆரம்பிக்கும் இந்த நடைப்பாதையை, தலவாக்கலை, ஹப்புத்தளை, லிந்துலை,பண்டாரவளை, தேமோதர வரை நீர்மானிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
300 கிலோ கிலோ மீற்றர் நீளம் கொண்ட கவரும் விதத்திலான நடைப்பாதையை உலகில் வேற எந்த நாட்டில் காண முடியாத விதத்தில் மிகவும் அழகான இயற்கை காட்சிகளுடன் இருக்கும் என்பதுடன் இதனை பார்த்து சுற்றுலாப் பயணிகள் ஆச்சரிப்படப் போவது நிச்சயம்.
சுற்றுலாப் பயணிகளுக்கு இடையில் தங்கும் வசதிகள்
இந்த நடைப்பாதையைில் சுற்றுலாப் பயணி ஒருவருக்கு 13 கிலோ மீற்றர் தூரம் வரை மாத்திரமே நடக்க முடியும். அந்த பயண நிறைவில் தேயிலை தோட்டத்திற்கு மத்தியில் இருக்கும் தோட்ட அத்தியட்சகரின் இல்லத்தில் தங்குமிட வசதிகளை வழங்க எதிர்பார்த்துள்ளோம்.
இதன் போது சுற்றுலாப் பயணிகளுக்கு பிரதேசத்திற்குரிய கலாசார ரீதியான உணவு மற்றும் பானங்கள் பரிமாறப்படும். இந்த புதிய அனுபவம் உலகம் முழுவதும் உள்ள சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை வென்றெடுக்கும் என்பது நிச்சயம் எனவும் சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.