சிறையிலுள்ள ஞானசார தேரர் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை
நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் ஆறுவருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பௌத்த பிக்கு ஞானசாரவின் காவியுடையைக் களைய வேண்டாம் என்று பிரதிமகாநாயக்க தேரர் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கலகொட அத்தே ஞானசார என்ற பெயரில் பௌத்த பிக்குவாக இருந்தவர் தற்போதைக்கு சிறைச்சாலை பதிவுகளின் பிரகாரம் நுவன் சிரிகுமார என்ற பேரில் சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்.
விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
இந்தநிலையில் அவர் பௌத்த பிக்குவாக இருந்த காலத்தில் இணைந்திருந்த கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமஸ்ரீதர்ம நிகாயவின் பிரதி மகாநாயக்கர், சிறைத் தண்டனை அனுபவித்துவரும் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசாரரின் காவியுடையைக் களைய வேண்டாம் எனவும், அவரைத் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து வெளியில் அழைத்து வரும்போது காவியுடை அணிய அனுமதிக்க வேண்டும் எனவும் சிறைச்சாலைகள் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பௌத்த மத பீடத்தின் கௌரவம் மற்றும் பௌத்த பிக்குகளுக்கான மத நடைமுறைகளைக் கருத்திற்கொண்டு சிறைச்சாலை நிர்வாகம் மனிதாபிமான அடிப்படையில் இதற்கு இடமளிக்க வேண்டும் என அக்கோரிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிறைச்சாலை விதிமுறைகளின்படி தண்டனை விதிக்கப்படும் கைதிகள் சீருடை அணிய வேண்டும் என்ற நடைமுறை உள்ள போதிலும், பிக்கு ஒருவரின் காவியுடை தொடர்பான விடயத்தில் விசேட விலக்களிப்பு வழங்கப்பட வேண்டும் என மகா சங்கத்தினர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.
செம்மணி 540 : தமிழ்த் தேசியக் கட்சிகளின் அமைதியின் பின்னணி! 56 நிமிடங்கள் முன்
100 ஆடுகள் பலியிட்டு கறிக்குழம்பு ...ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா! எங்கு தெரியுமா? Manithan