தமிழீழ ஆதரவாளர்களால் ஆக்கிரமிக்கப்படும் பௌத்த அடையாளங்கள்: கலகம தேரரின் சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டு
தனி தமிழீழ கோட்பாட்டுவாதிகள் மற்றும் தீவிரவாதிகளால் வடக்கு கிழக்கிலுள்ள பௌத்த அடையாளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதாகவும், அவற்றை மீள பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்படலாம் என கலகம குசலதம்ம தேரர் குற்றம்சாட்டியுள்ளார்.
இணைத்தளம் ஒன்றிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்துரையாற்றிய அவர்,
அழிக்கப்படும் பௌத்த அடையாளங்கள்
இது தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் அவதானம் செலுத்தி, அதாவது கல்வி மறுசீரமைப்பிற்கு முக்கியத்தும் வழங்கியது போல தலையிட வேண்டும்.
அவ்வாறு நடக்கவில்லை என்றால் வடக்கு கிழக்கில் பல இடங்களை நாம் இழக்க நேரிடலாம். எதிர்காலத்தில் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலைக்கு செல்ல முடியாத சூழலும் உருவாகலாம்.
கந்தரோடை விகாரையை சர்வமத மத்தியஸ்தானமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு தொல்லியல் திணைக்களமும் உதவி செய்து வருகிறது.
தேரர்கள் வசிக்கும் பகுதியும் புராதன விகாரைகள் காணப்படும் பகுதிகளை பிரிப்பதற்கான மதில் கட்டுவதற்கான வேலைகள் நடைபெறுகின்றன.

நாங்கள் அங்கு சென்று இது தொடர்பில் மக்களையும் அதிகாரிகளையும் தெளிவுபடுத்துவதற்காக காணொளி ஒன்றையும் வெளியிட்டிருந்தோம். ஆனால் யாரும் அது தொடர்பில் பேசவில்லை.இப்போது எல்லாம் நடந்து விட்டது.
கந்தரோடை விகாரையில் இன்றும் ஒரு தேரருக்கு இருக்க முடியாத சூழல் காணப்படுகிறது. பௌத்தர்கள் என்ற வகையில் நாம் வெட்கித் தலைகுணிய வேண்டியுள்ளது.
இது அரசாங்கத்தின் கட்டுபாட்டை மீறிய செயற்பாடுகளா என குறிப்பிட்டுள்ளார்.