கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியை பார்வையிட்ட கஜேந்திரன் எம்.பி
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின்
ஒன்பதாம் நாள் அகழ்வாய்வுப் பணிகள் இடம்பெற்றுவருகின்ற நிலையில் நாடாளுமன்ற
உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கள விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
அகழ்வாராய்ச்சி பணிகள்
முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், விசேட சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவ தலைமையில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ குழுவினர், தடயவியல் பொலிஸார், உள்ளிட்ட தரப்பினரின் பங்குபற்றுதல்களுடன் இந்த ஒன்பதாம் நாள் அகழ்வாராய்ச்சி பணிகள் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் இதற்கு முன்னர் இடம்பெற்ற இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சிகளின்போது 40மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தப்பட்டுள்ளது.
அத்துடன், மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் போது இதுவரை 5 எலும்புகூட்டுத்தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மொத்தமாக 45 மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன் இன்றும் சில மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |







திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri
