டக்ளஸை கண்டதும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் போராட்ட இடத்திலிருந்து நழுவினரா?
யாழ். மாவட்ட மீனவர்களினால் இன்றைய தினம் இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையினை நிறுத்த கோரி யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக மாபெரும் வீதிமறியல் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரன், கஜேந்திரகுமார் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீனவர்களினால் முன்னெடுக்கப்பட்ட வீதி மறியல், முடக்க போராட்டத்திற்கு வருகை தந்தபோது டக்ளஸ் தேவானந்தாவின் வருகையை அவதானித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவ்விடத்தை விட்டு நழுவிச் சென்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
ஏ-9 வீதி மற்றும் யாழ். மாவட்ட செயலகத்தை முடக்கி மீனவர்கள் போராட்டம் நடாத்தியிருத்தனர்.

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri
