கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு பிணை
புதிய இணைப்பு
யாழ். நெல்லியடிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முதன்மை வேட்பாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சற்றுமுன்னர் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் விதிமுறைகளை மீறி துண்டுப்பிரசுரம் விநியோகித்த குற்றச்சாட்டின் பேரில் இன்று மாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் அவர் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செய்தி - ராகேஸ்
முதலாம் இணைப்பு
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ். நெல்லியடி பிரதேசத்தில் வைத்தே இன்று(24.10.2024) அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழில் தேர்தல் விதிமுறைகளை மீறி துண்டுப்பிரசுரம் விநியோகித்த குற்றச்சாட்டின் பேரில் அவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வாக்குமூலம் பதிவு
இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டமை தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு எமது ஊடகப்பிரிவு தொடர்பை மேற்கொண்டு வினவிய போது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னரே ஏனைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri