அமெரிக்காவில் இராஜதந்திர சந்திப்புக்களில் ஈடுபட்டுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
புதிய இணைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அமெரிக்காவின் காங்கிரஸ் உறுப்பினர்களான சமர் அலி மற்றும் லிகான் ஓமா ஆகியோரை சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பு நேற்றையதினம் (07.02.2024) புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
காங்கிரஸ் உறுப்பினர்களான சமர் அலி மற்றும் லிகான் ஓமா ஆகிய இருவரும் அமெரிக்காவின் காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் மிகவும் முற்போக்குவாத இளம் அரசியல் தலைவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி - கஜிந்தன்
அமெரிக்காவிற்கு சென்றுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அங்கு இராஜதந்திர சந்திப்புக்களில் ஈடுபட்டுள்ளார்.
அந்தவகையில், அமெரிக்கா நாடாளுமன்றத்தில் தமிழர் விவகாரங்களில் அக்கறை செலுத்தி செயற்பட்டு வரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களான விலே நிக்கல், டொபரஞ் ரோஸ், ஜெமி ரஸ்கின் மற்றும் டனி கே டேவிஸ் ஆகியோருடன் சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளார்.
இவர்கள் நால்வரும் தமிழர் விவகாரங்களிலும் தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் அதிக அக்கறை செலுத்தியவர்கள் ஆவர்.
தமிழர் தேசம் தொடர்பான தீர்மானங்கள்
மேலும் இவர்கள், அமெரிக்க நாடாளுமன்றத்தில் தமிழர் தேசம் தொடர்பாக பல தீர்மானங்களை நிறைவேற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
