கஜேந்திரகுமார் தாக்கப்பட்டமை தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை
மருதங்கேணியில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தாக்கப்பட்டமை தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில், கஜேந்திரகுமார்பொன்னம்பலத்தால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்தவகையில் இன்றையதினம் (06.07.2023) மருதங்கேணி பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விசாரணைக்கு அழைத்துக் கொள்ளப்பட்டு ஆரம்ப கட்ட விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.
பொலிஸார் விசாரணைக்கு அழைப்பு
இது ஆரம்பகட்ட விசாரணை என்பதுடன், பரீட்சை இணைப்பு நிலையத்தில் கடமையில் இருந்த பொலிஸாரும் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில், அவர்கள் பரீட்சை காரணமாக சமூகமளிக்க முடியவில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பரீட்சை கடமையில் ஈடுபட்டிருப்பதால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (09.06.2023) மதியம் இரண்டு மணிக்கு அவர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்துக்கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |




