அர்ச்சுனா எம்.பியின் இருக்கையை மாற்றக்கோரி சபாநாயகருக்கு கஜேந்திரகுமார் கடிதம்
நாடாளுமன்றத்தில் அர்ச்சுனா இராமநாதனின் இருக்கையை மாற்றக்கோரி நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபாநாயகரை எழுத்து மூலம் கோரியுள்ளார்.
குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அவசரமாக இடமாற்றப்படும் நீர்கொழும்பு சிறைச்சாலை பெண் கைதிகள்! அடுத்தடுத்து பதிவாகும் மரணங்கள் - தீவிரமடையும் விசாரணை
தொடர் அச்சுறுத்தல்
உங்களுக்கு தெரிந்தபடி, நாடாளுமன்றத்தில் எனக்கு இடதுபுறம் அமர்ந்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், மாவட்ட அபிவிருத்தி கூட்டங்களிலும் சமூக ஊடகங்களிலும் பொதுவெளியில் என்னை தொடர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டியும், வன்முறை அச்சுறுத்தல் விடுத்தும், இழிவான சொற்களைப் பயன்படுத்தியும் வருகின்றார்.

சமீப காலமாக இந்த நடத்தை எந்த அளவிற்கு மோசமடைந்துள்ளது என்றால், அது என் கவனத்தைச் சிதறடிப்பதால், நாடாளுமன்ற அவையில் அவரை எனக்கு அருகில் அமர வைப்பது எனக்கு இயலாத காரியமாகிவிட்டது.
குறிப்பிட்ட அந்த உறுப்பினர், ஒரு சுயேட்சை குழுவிலிருந்து முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி
பொதுவாக, இத்தகைய உறுப்பினர்களுக்கு அனைத்து மூத்த தலைவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களுக்கு இருக்கை வழங்கப்படும்.
இருப்பினும், வழக்கமான நடைமுறையை மீறி, குறிப்பிட்ட அந்த நாடாளுமன்ற உறுப்பினர், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி தலைவர்களுக்கும், மூத்த உறுப்பினர்களுக்கும் இடையில் அமர அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விடயத்தில் நீங்கள் தலையிட்டு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி உறுப்பினர்களுக்குப் பிறகு சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்களை அமர வைக்கும் வழக்கமான நடைமுறைக்கு இணங்க, குறிப்பிட்ட அந்த நாடாளுமன்ற உறுப்பினரை என்னிடமிருந்து இடதுபுறமாக நகர்த்தும்படி கேட்டுக்கொள்கிறேன் என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைக்குள் நடந்த கொடூர தாக்குதல்! சுற்றித்திரியும் கைதிகளின் உறவினர்கள் - வெளியாகவுள்ள பிரேத பரிசோதனை அறிக்கை
140 - 145 வேகத்தில் பந்துவீசக்கூடியவர் எங்களிடம் இல்லை: தோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri
ஜேர்மனி உருவாக்கிவரும் புதிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு- அமெரிக்காவின் Patriot-க்கு மாற்று News Lankasri