அரசாங்கத்திற்கு எதிராக ராகலையில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட காலிமுகத்திடலை நோக்கிய நடைபயணம்
நாட்டில் இடம்பெற்று வரும் பொருளாதார சிக்கலிற்குக் காரணமான ராஜபக்ச குடும்ப ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்தநிலையில், ராகலை பகுதியில் வசிக்கும் மணிவேல் சத்தியசீலன் தலைமையிலான குழுவினர் காலி முகத்திடலை நோக்கி தமது நடைப்பயணத்தை இன்றையதினம் ஆரம்பித்ததுள்ளனர்.
இன்று காலை ராகலையில் மத வழிபாடுகளின் பின்னர் இந்த பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது நிலவி வரும் பிரச்சினைகளுக்கு அரசு உடனடியாகத் தீர்வு வழங்க வேண்டும், உரப்பிரச்சினை, பொருளாதாரப் பிரச்சினை, எரிவாயு மற்றும் பொருட்களின் விலை உயர்வு போன்ற பிரச்சினைகளுக்கு அரசு தீர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி நுவரெலியா, ஹட்டன், கினிகத்தனை, அவிசாவளை வழியாக கொழும்பு காலிமுகத்திடலை நோக்கி உடபுசல்லாவை சேர்ந்த மணிவேல் சத்தியசீலன் தலைமையில் நடைப்பயணத்தினை ஆரம்பித்துள்ளனர்.
இந்த நடைப்பயணத்தில் மக்கள் சத்தியசீலனை உற்சாகப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



