உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு ஆதரவை அதிகரிக்க முடிவு
பிரான்ஸின் ஏவியன் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டில், உக்ரைனின் வான் பாதுகாப்புப் படைகளை வலுப்படுத்தவும், ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகள் மீதான பொருளாதாரத் தடைகளைத் தீவிரப்படுத்தவும் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோருக்கு இடையே முக்கிய இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
உக்ரைன் சொந்தமாக ஏவுகணைத் தடுப்பு அமைப்புகளைத் தயாரிப்பதற்கான உரிமங்களை வழங்குவது மற்றும் குளிர்கால உதவித் தொகுப்புகளை வழங்குவது குறித்து ஜி7 நாடுகள் உறுதியளித்துள்ளன.
போர்நிறுத்தம்
அதேவேளையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால், ரஷ்யாவின் மீதான அழுத்தத்தை அதிகரிக்க இதுவே சரியான தருணம் என்று தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், லெபனானில் உடனடியாக போர்நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்றும், ஹிஸ்புல்லா அமைப்பை நிராயுதபாணியாக்க வேண்டும் என்றும் ஜி7 கூட்டு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam
பிரித்தானிய கடற்கரைக்கு அருகே எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்திய ரஷ்ய போர்கப்பல்., நடந்தது என்ன? News Lankasri