சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலம் அறிவிப்பு
2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை இன்னும் இரண்டு வாரங்களுக்குள் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இன்றையதினம்(10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
[L4W9LV5
விரைவில் வெளியாகும் பெறுபேறுகள்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடும் பணி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பரீட்சை பெறுபேறுகளை இம்மாதத்திற்குள் வழங்கத் தயாராக உள்ளோம்.

எமது தேவை மிக விரைவில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட வேண்டும் என்பதுதான்.
பெறுபேறுகளை இறுதி செய்யும் பணி இன்னும் சில நாட்களில் நிறைவடையும். இதனையடுத்து இன்னும் இரு வாரங்களுக்குள் செப்டெம்பர் மாதத்திற்குள்ளாகவே பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்க்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri