தங்க இறக்குமதிக்கு தடை! அமெரிக்கா, கனடா உள்ளிட்ட ஏழு நாடுகள் எடுத்துள்ள தீர்மானம்
ரஷ்யாவிடம் இருந்து தங்கத்தை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்க அமெரிக்கா, கனடா உள்ளிட்ட ஜி 7 நாடுகள் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
உலகளவில் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்த நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 7 நாடுகளை கொண்ட ஜி 7 கூட்டமைப்பின் 48ஆவது மாநாடு நேற்று தொடங்கியுள்ளது.
ஜெர்மனியில் உள்ள ஸ்குலோஸ் எல்மாவ் என்ற இடத்தில் இந்த மாநாடு ஆரம்பமாகியிருந்த நிலையில் 2 நாட்கள் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
| 100 ஆண்டுகளுக்கு பின்னர் ரஷ்யாவுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை |
தங்க இறக்குமதிக்கு தடை
இந்த நிலையில் ரஷ்யாவின் மிகப்பெரிய ஏற்றுமதி பொருட்களில் ஒன்றாக உள்ள தங்கத்தின் இறக்குமதிக்கு தடை விதிக்கப்படவுள்ளது.

நேற்று ஜி 7 மாநாடு தொடங்கும் முன்பாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்படி முதல் கட்டமாக அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், கனடா ஆகிய நாடுகள் இந்த தடையை விதித்துள்ளன.
அவற்றினை பின்பற்றி ஜெர்மனியும், இதர ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவின் தங்கத்துக்கு தடை விதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை கச்சா எண்ணெய், எரிவாயுக்கு அடுத்தப்படியாக ரஷ்யாவில் இருந்து ஆண்டுக்கு பல இலட்சம் கோடிக்கு தங்கம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
உக்ரைன் மீதான தாக்குதல்

கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இருந்தே ரஷ்ய படைகள் இதுவரையில் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வந்த நிலையில் நேற்று முதன்முறையாக தனது நட்பு நாடான பெலாரசில் இருந்து நீண்ட தூர ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவ் மீது கடந்த 3 வாரமாக பெரியளவில் எந்த தாக்குதல்களையும் நடத்தாமல் அமைதியாக இருந்த ரஷ்யா, நேற்று திடீரென குடியிருப்புகள் மீது ஏவுகணைகளை வீசி தாக்கியது.
குறிப்பாக, ஜி 7 மாநாடு தொடங்கும் முன்பாக இது நடந்ததில், 2 பெரிய அடுக்குமாடி குடியிருப்புகள் சேதமடைந்தன. அதேசமயம் கிழக்கு உக்ரைனின் பெரும் பகுதியை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செவ்வாய்- ராகு இணைவு தீ விளையாடப் போகுது.. வாழ்க்கையில் பெரிய திருப்பங்களை காணும் 3 ராசிகள் Manithan
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri