“இந்தியா - இலங்கை இடையிலான இராணுவ பயிற்சி இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும்”
இந்தியாவுக்கும்,இலங்கைக்கும் இடையிலான கூட்டு 12 நாள் பாரிய இராணுவப் பயிற்சி, இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் பங்களிப்பு செய்யும் என்று இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இரண்டு இராணுவங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் ஊக்குவிக்கும் என்று தெரிவித்துள்ளது.
இந்திய இராணுவப்படைத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே (Manoj Mukund Naravane) , இந்த இராணுவப் பயிற்சியை கடந்த வெள்ளிக்கிழமை பார்வையிட்டார்.
இந்திய மற்றும் இலங்கை இராணுவத்திற்கு இடையேயான மித்ர சக்தி 21ஆவது பயிற்சியின் 8 வது பதிப்பு, இலங்கையின் கிழக்கு அம்பாறையில் முடிவடைந்ததாக இந்திய இராணுவம் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 4 முதல் 15 வரை 12 நாள் பாரிய இராணுவப் பயிற்சி மாவட்டத்தில் உள்ள போர் பயிற்சி கல்லூரியில் நடைபெற்றது.
ஜெனரல் நரவனே சனிக்கிழமையன்று இலங்கை கடற்படையின் தலைமையகத்திற்குச் சென்று அதன் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெதன்ன (Nishantha Ulugetanna) மற்றும் அதிகாரிகளுடன் உரையாடினார்.பின்னர், அவர் இலங்கை விமானப்படையின் தலைமையகத்திற்கும் விஜயம் செய்தார்.
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri