தந்தை கெஹெலியவை காப்பாற்ற மகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில்
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகள் சமித்ரி ரம்புக்வெல்ல மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த முறைப்பாட்டை இன்று அவர் பதிவு செய்துள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனது தந்தையின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதால் உடனடியாக விசாரணை நடத்தி நீதி வழங்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இம்யூனோகுளோபுலின் இறக்குமதி
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கடந்த மாதம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

தரமற்ற இம்யூனோகுளோபுலின் இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் சென்றிருந்தபோதே கைது செய்யப்பட்டிருந்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நடிகை குஷ்புவா இது.. 20 வயதில் அடையாளம் தெரியாத அளவுக்கு எப்படி இருந்திருக்கிறார் பாருங்க! Cineulagam
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam