திலினி பிரியமாலி மற்றும் சிறிசுமண தேரர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு
பண மோசடி தொடர்பான குற்றச்சாட்டில் கைதான திலினி பிரியமாலி மற்றும் பொரளை சிறிசுமண தேரர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் முன் குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இருவரையும் எதிர்வரும் 16ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வெளிவந்த தகவல்கள்
பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியுடன் தொடர்புடையவர்கள் குறித்து நாளுக்கு நாள் பல தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் பொரளை சிறிசுமண தேரரை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
திலினி பிரியமாலி செய்ததாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பான விசாரணைகளின் போது தெரியவந்த உண்மைகளுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 22 மணி நேரம் முன்

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
